simbu help anchor dd

நடிகர் சிம்புவை பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் அசால்ட்டாக சமாளித்து, தனக்குள் இருக்கும் பல்வேறு திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு நடிகர், நடன இயக்குனர் என்பதையும் தாண்டி இசையாமைப்பாளர், பாடகர், என தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் சிம்பு என்பது அனைவரும் அறிந்தது தான். 

என்ன தான் அவரை பற்றி நிறைய தவறான செய்திகள் வெளிவந்தாலும், சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சில பிரபலங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்கும் போது தான் ரசிகர்களுக்கு சந்தோஷம் என கூறலாம்.

அப்படி நடிகர் சிம்புவை பற்றி டிடி வெளியிட்டுள்ள ஒரு செய்தி அனைத்து சிம்பு ரசிகர்களையும் குஷி படுத்தியுள்ளது.

சிம்பு குறித்து டிடி கூரியுள்ளது... ஒரு பார்ட்டில் டிடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஒருவர் டிடியின் ரசிகர் என்று கூறி தொல்லை செய்துள்ளார். மேலும் டிடியின் போன் நம்பர் மற்றும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தொல்லை செய்ததாகவும் அப்போது டிடியின் முகம் மாறுவதை பார்த்து அந்த இடத்திற்கு வந்த சிம்பு அந்த நபரிடம் மாட்டிக் கொண்டிருந்த டிடியை காப்பாற்றி அழைத்து சென்றாராம். இந்த சின்ன நிகழ்வை சொல்லி சிம்பு மிகவும் நல்லவர் என்று கூறியுள்ளார் டிடி.