நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை அதிகரித்து, குண்டாக இருக்கிறார். இதனால் ஒரு தரப்பினர் சமூக வலைத்தளத்தில் சிம்பு ரசிகர்களை வெறுப்பேற்றுவதற்காகவே  இவரை கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் லண்டன் பறந்தார் சிம்பு. இதுவரை சிம்புவின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் முதல் முறையாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்பு கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்கிற திரைப்படத்தில் நடித்தார். அனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.

இந்த படத்தை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக  உடல் எடையை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டார். சிம்பு நடிக்க உள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

இத்தனை நாட்கள் சிம்புவின் புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் தற்போது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. எனினும் இதில் சிம்புவின் கண்கள், முகம் மட்டுமே , தெரிகிறது உடல் சரியாக தெரியவில்லை என்றாலும் அவர் ஃபிட்டாக மாறிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.