சிம்பு பற்றி இவ்ளோ மோசமாவா பேசுறது... சர்ச்சையில் சிக்கிய SK - ‘பிரின்ஸ்’ ஐ பிரித்தெடுக்கும் சிம்பு ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு போல் மிமிக்ரி செய்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Simbu fans condemns Sivakarthikeyan for his old mimicry video create controversy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து அதன்மூலம் கிடைத்த புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அவர் மேடையில் மிமிக்ரி செய்த பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

அந்த வீடியோ அவர் சினிமாவில் நடிக்க வரும் முன்னர் எடுத்தது போல் தெரிகிறது. அதில் சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார். அப்போது சிம்பு அரசியலுக்கு வந்த என்ன செய்வார் என்கிற கான்செப்டில் பேசிய சிவகார்த்திகேயன், கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு சொல்லியிருக்கிறது. நான் அரசியலுக்கு வந்தா அதை நிறைய பேரை வங்க வைப்பேன் சார் என்றார். இவ்வாறு சிம்பு குரலில் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... தனுஷை தொடர்ந்து.. புதிய வீடு கட்டும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா! வைரலாகும் வீடியோ..!

சிவகார்த்திகேயன் பிரபலமடைவதற்கு முன் நகைச்சுவைக்காக இப்படி பேசி இருந்தாலும், தற்போது அவர் ஒரு முன்னணி நடிகனாக இருப்பதால் அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் கிளம்பி உள்ளன. குறிப்பாக இந்த வீடியோ பார்த்து கடுப்பான சிம்பு ரசிகர்கள் ‘பிரின்ஸ்’ சிவகார்த்திகேயனை பிரித்தெடுத்து வருகின்றனர். 

சிவகார்த்திகேயனும், சிம்புவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கூட பெங்களூருவில் நடைபெற்ற சைமா திரைப்பட விருது வழங்கும் விழாவில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாரிக்கொண்டனர். அவர்கள் இருவரும் நட்புடன் இருப்பது பிடிக்காமல் தான் யாரோ சிலர் இதுபோன்று பழைய வீடியோவை வைரலாக்கி வருவதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஜிபி முத்து மகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி... பிக்பாஸில் இருந்து வெளிவந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios