இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த சில வாரங்களாக 'ஈஸ்வரன்’ பட ஷூட்டிங் நடந்து வந்தது. நடிகர் சிம்புவும், முழு மூச்சுடன் இறங்கி நடித்ததில், மிக வேகமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் இந்த படம் குறித்து, லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி சிம்பு ரசிகர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்டதால், தற்போது படக்குழு  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். இவர் தன்னுடைய டப்பிங் பணியை துவங்கி தற்போது முடித்தும் கொடுத்து விட்டாராம்.

இதனை அடுத்தே நாயகி நிதி அகர்வால் உள்பட மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

'ஈஸ்வரன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தீபாவளி விருந்தாக... "ஈஸ்வரன்' படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. பட குழுவினரும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மீது படு வேகம் காட்டி வருகிறார்கள்.'