பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் நல்ல மனிதர் என்கிற பெயரை பெற்றாலும், சிலரின் தூண்டுதலால் அதிக வெறுப்பை சம்பாதித்த மஹத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அனைத்து போட்டியாளர்களையும் பாதித்தாலும், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை சற்று அதிகமாகவே பாதித்துள்ளது.

இந்நிலையில் வெளியே வந்ததும் முதல் வேலையாக பிக் பாஸ் வீட்டில் போடப்பட்ட குறும்படத்தை பதிவிட்டு, தன்னுடைய காதலி பிரச்சியை தான் அதிகம் நேசிப்பதாக ட்விட் போட்டிருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது மஹத் தன்னுடைய நண்பன் சிம்புவை சந்தித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவில் மகத்தின் கைகளை மற்றொரு நண்பர் பிடித்து கொள்ள, சிம்பு மஹத்தின் கன்னத்தில் செல்லமாக சப்பு சப்பு என நான்கு அரை அறைந்தார். பின் 'உன்னை எப்படி அடிச்சாலும் வலிக்காது, ஏன்னா அவ்வளவு அடி ஏற்கனவே வாங்கியிருக்க' என்று கூறி அன்புடன் கட்டி பிடித்து கொள்கிறார். 

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ள மஹத்... இதுதான் சிம்பு, என்னுடைய பெஸ்ட் பிரெண்ட் என்று கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் செம வைரலாக்கி வருகிறார்கள்.