தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனர் , பாடகர் என பல முகங்களை கொண்ட டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்.
சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என சிம்பு முன்வந்த போது மகனுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை தெரிவித்து இனி கட்சி பணிகளில் தீவிரம் காட்ட போவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘என் மகன் சிம்பு ஒரு தமிழன் என்கிற உணர்வோடு ஜல்லிக்கட்டுக்காக போராடி ஏற்படுத்திய எழுச்சி இது என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழர்களுக்காக நாங்கள் களத்தில் இறங்க இருக்கின்றோம், விரைவில் பிரமாண்ட மாநாடு ஒன்று நடத்த உள்ளேன் என்றும் கூறியுள்ளார் .
அந்த மாநாட்டில் சிம்பு ரசிகர்களின் கூட்டத்தை பாருங்கள் ’ என அவர் கூறியுள்ளார், இவரது பேச்சு கட்சியை வளர்ப்பதற்கு பேசுவது போல் உள்ளது என பலர் சமூக வலை தளத்தில் கூறி வருகின்றனர்.
மேலும் சிம்பு தனக்கு அரசியல் மீது துளியும் ஆர்வம் இல்லை என கூறி வரும் நிலையில் டி.ஆர்.ருடைய இந்த செயலுக்கு சிம்பு சம்மதித்தாரா? என்பது சந்தேகம் தான் .
