Asianet News TamilAsianet News Tamil

கெடுத்துட்டியே... என்ன கெடுத்துட்டியே சிம்பு - ஹன்சிகாவின் துள்ளல் ரொமான்ஸோடு வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!

நடிகர் சிம்பு (simbu) தன்னுடைய முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள 'மஹா' (Maha movie) படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

 

simbu and hansika starring romantic first single song released
Author
Chennai, First Published Dec 4, 2021, 7:49 PM IST

நடிகர் சிம்பு (simbu) தன்னுடைய முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள 'மஹா' (Maha movie) படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு  நடித்த 'மாநாடு' திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி, வெற்றிநடை போட்டு வரும் நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள 'மஹா' படத்தில் இடம்பெற்றுள்ள செம்ம ரொமான்டிக் பாடல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

simbu and hansika starring romantic first single song released

பல வருடங்களாக ஒற்றை வெற்றிக்கு போராடி வந்த சிம்புக்குவுக்கு, சமீபத்தில் வெளியான 'மாநாடு' படம் சிறந்த கம் பேக் மூவியாக அமைந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் ஓவர் உட்சாகத்தில் உள்ளனர். படம் வெளியான இரண்டாவது நாளே சிம்பு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கேக் வெற்றி 'மாநாடு' படத்தின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். சிம்புவுக்கு சமமான வில்லன் வேடத்தில் மிரட்டி இருந்த எஸ்.ஜே.சூர்யாவும் பல பேட்டிகளில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

simbu and hansika starring romantic first single song released

இந்நிலையில் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன்னுடைய முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள 'மஹா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின்  மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், அடுத்தடுத்து பல தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் இப்படத்தில் இடம்பெற்ற, முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர்.. கெடுத்துட்டியே... கெடுத்துட்டியே என்கிற பாடல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் வில்லனாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை, விவேகா வரிகளில் பென்னி தியால் பாடியுள்ளார். ஏற்கனவே சிம்புவின் 'மாநாடு' வெற்றியால் திளைத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இது தித்திப்பான விஷயம் என்றே சொல்லலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios