சபரிமலைக்கு மாலை போட்டு, நல்ல பிள்ளையாக 40 நாட்கள் விரதம் இருந்து, மலைக்கு போய் திரும்பினார் சிம்பு. தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கெனவே ஹன்சிகாவுடன் சேர்ந்து "மஹா" படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தோம். அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது வெளியாகியுள்ள "மஹா" படத்தின் புதிய போஸ்டர் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

"வாலு" படத்தில் சிம்புவிற்கும், ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனை இருவரும் மறுக்காத நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. 

இதேபோன்று தான் நயனுடன் காதலில் இருந்த போதும், அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதனால் தான் இருவரது காதலும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்றே ஹன்சிகா, சிம்பு காதலும் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இனி சினிமாவில் சின்சியராக கவனம் செலுத்த உள்ள சிம்புவிற்கு ஹன்சிகா உதவ முன்வந்துள்ளார். "மஹா" படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் "மஹா" படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹன்சிகா மீது ஹாயாக படுத்து சிம்பு குட்டி தூக்கம் போடுவது போன்று இருக்கும் அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அதைப் பார்க்கும் சிம்பு ரசிகர்கள், ஆஹா நம்ம STR அடுத்த ரவுண்டுக்கு தயார் ஆகிட்டார் போல என கொண்டாட்டத்தில் உள்ளனர்.