ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் பலரில் நடிகர் சிம்புவும் ஒருவர், சிம்பு தன்னுடைய போராட்டத்தை பத்திரிகையளர்கள் முன் அதிரடியாக தெரிவித்து தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர், அது பற்றி கூறிய சிம்பு அதே நோக்கத்தை முன் வைத்துதான் நானும் போராடினேன் , தன்னை ஏன் போலீசார் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் .
மேலும் மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், கைது செய்த மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .
