கார்த்தி - ஜோதிகா அக்கா, தம்பியாக நடித்துள்ள "தம்பி" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கார்த்தி, சூர்யா, ஜோதிகா, சத்யராஜ், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் பேச மேடையேறிய நடிகர் கார்த்தி, தலைவன்னா இப்படி தான் இருக்கனும் என அவரது ரசிகர்கள் புகழும் படி ஒரு காரியத்தை செய்து அனைவரையும் அசரடித்துள்ளார். 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நித்யானந்தன் என்பவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும் போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மரணமடைந்த நித்யானந்தன் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர், மேலும்  கார்த்தியின் மக்கள் நல மன்ற நிர்வாகியாவார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட கார்த்தி, நித்யானந்தன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது சடலத்தை பார்த்த  கார்த்தி கதறி அழுதார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 


இந்நிலையில் தம்பி ஆடியோ விழாவில் பேசுவதற்கு முன்பு, இன்று காலை உயிரிழந்த தனது ரசிகர் நித்யானந்தனுக்கு  ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டுமென தனது ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள் வைத்தார்.