sidharth put the controversial twit for 2g spectrum and jayalalitha case

தமிழகமே பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புகளில் ஒன்று '2g ' ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு. இந்த தீர்ப்பு இன்று காலை 11 மணியளவில் வெளியானது. இந்த வழக்கில் தொடர்புடையாதாக கருதப்பட்ட ஆ.ராசா, கனிமொழி மற்றும் சமந்தப்பட்ட 14 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் தீர்வு வெளியானதும் திமுக கட்சி தொண்டர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் இனிப்புகள் பரிமாறியும், வெடிகளை வெடித்தும் கொண்டாடினர்.

இது ஒரு புறம் இருக்க இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே நடிகர் சித்தார்த் கனிமொழி மற்றும் ராசாவை தாக்குவது போல் ஒரு கருத்தை ட்விட்டரில் பதிவு செய்தார். அதில் 'திருட்டுபயலே 1' கனிமொழி மற்றும் ராசாவுடையது. அதற்கான தீர்ப்பு இன்று வெளியாகிவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்த தீர்ப்பு நன்றாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார். 

மேலும் திருட்டு பயலே 2 வில் இருப்பது ஜெயலலிதா மற்றும் சசி குழுவினர் என்று கூறி தமிழனடா என பதிவிட்டார். ஆனால் இந்த ட்விட்டர் ஒரு சில நிமிடத்தில் அவரே நீக்கி விட்டார்.

இதையடுத்து 2g வழக்கின் தீர்ப்பு வெளியானதும் இந்தியாவே சிறந்தது, இந்திய அரசியலின் குற்றமற்ற தன்மைக்கு வாழ்த்துக்கள் என்றும். இனி 2ஜி கிடையாது... தேசிய கீதம் ஒலிக்கிறது... எழுந்து நில்லுங்கள் என்று சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு ட்விட் போட்டுள்ளார். 

Scroll to load tweet…