2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதியான நேற்று, கடந்த 22 ஆண்டுகளாக அமலில் இருந்த காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370 ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

நடிகை அமலாபால் 'மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆரோக்கியமான ஒரு முடிவு என்றும், இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்றும் நாடு சமாதானம் பெற வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமலாபாலின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கமெண்டுக்கள் பதிவாகி வருகின்றன. 

இது குறித்து, நடிகர் சித்தார்த் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் திசை திருப்பும் வேலையாகும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே தான் செய்கின்றார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் காஷ்மீர் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவாக பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பாகவும் சிலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.