Siddharth and Milind four years of work will be released on 3rd ...

பயம் கூட ஒரு போதை போன்று தான் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவான பேய் படம் ‘அவள்’.

இந்தப் படத்தின் கதையை சித்தார்த்தும், மிலந்த் ராவும் இணைந்து நான்கு ஆண்டுகளாக எழுதி உள்ளனர் என்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த நிலையில், அவள் படத்தை குறித்துப் பேசிய நடிகர் சித்தார்த், “நல்ல பேய் படத்தை பார்ப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும். என்னுடைய பத்து வயதில் நான் பேய் படங்களை பார்க்க தொடங்கினேன்.

அவள் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சிகள் கூட இல்லை. பயம் கூட ஒரு போதை போன்றுதான். அதை இந்தப் படத்தில் நன்கு உணர்வீர்கள். அவள் திரைப்படம் வரும் நவம்பர் 3-ஆம் தேதி திரைக்கு வரும்” என்று தெரிவித்தார்.