Shruti haasan boyfriend: நாங்கள் ஏற்கெனவே, திருமணம் ஆனவர்கள் என்று ஸ்ருதி ஹாசனுடனான உறவு குறித்து சாந்தனு ஹசாரிகா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். இவர், 2020ம் ஆண்டு முதல் சாந்தனு என்பவரை காதலித்து டேட்டிங்கில் இருந்து வருகிறார். இதையடுத்து, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

ஸ்ருதிஹாசன் திருமணம்:

முன்னதாக, லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக நடிகரை காதலித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இதையடுத்து, தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சாந்தனு, டெல்லியை சேர்ந்த ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர். 

இந்நிலையில், சமீபத்தில் சாந்தனு அளித்த பேட்டி ஒன்றில், 

ஸ்ருதி ஹாசனுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் சாந்தனுவிடம் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சாந்தனு, நாங்கள் ஏற்கெனவே கிரியேட்டிவாக திருமணம் ஆனவர்கள். எங்களுடைய பந்தம் மிகவும் உறுதியானது. அதற்கு சாட்சியாக நாங்கள் எங்கள் தொழிலில் செய்யும் புதுமையான விஷயங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நாங்கள் இருவரும் இணைந்து புதுமையான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். எப்போதும், புதுமையாக யோசித்து இருப்பது தான் எங்கள் இருவருக்கும் ரொம்பவும் முக்கியம்.

இருப்பினும் திருமணம் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆகவே, இனி வரும் நாட்களில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

 மேலும் படிக்க...Rakul Preet Singh hot: எல்லை மீறிய கவர்ச்சியில் போஸ் கொடுத்து....இளசுகளை திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்..