அச்சச்சோ என்ன தான் ஆச்சு ஸ்ருதிஹாசனுக்கு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே?

தனது உடலை வெகுவாக ட்ரான்ஸ்பார்ம் செய்துள்ளார். பார்ப்பதற்கு படுமோசமாக, நோய்வாய்ப்பட்டது போல ஒல்லி பெல்லியாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

 Shruti Haasan Hot Stunning Look on her instagram

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனும் பல மொழிகளில் அறியப்படும் நாயகியாக இருக்கிறார். தென்னிந்திய சினிமா அனைத்திலும் ஒரு ரவுண்டு பார்த்து வரும் இவர் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பிரபலம். கமலஹாசனின் ஹேராம் படத்தில் சிறு வயது பெண்ணாக சினிமா துறைக்கு என்ட்ரி கொடுத்திருந்த இவர் சூர்யாவின் ஏழாம் அறிவு மூலம் நாயகியாக உருவெடுத்தார்.  பாப் பாடகியான  ஸ்ருதிஹாசன் தனது குரலால் ரசிகர்களை வசிகரிப்பவர்.

மேலும் செய்திகளுக்கு...ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராய் லட்சுமி... ஷாக்கிங் போட்டோஸ் இதோ

தமிழில் இறுதியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்னும் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் இறுதியாக கிராக், பிட்டா கத்தலு படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்புகளை பெற்று இருந்தது. முன்னதாக காதல் தோல்வி காரணமாக மிக மனசோர்வுடன் காணப்பட்ட சுருதிஹாசன் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார்.

தற்போது இரண்டாவது காதலும் இவருக்கு செட் ஆகிவிட்டது. அவ்வப்போது தனது காதலுடனான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். அவரது காதலர் சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது இவரது instagram பக்கத்தில் பார்க்க முடியும். இதற்கிடையே  தனது உடலை வெகுவாக ட்ரான்ஸ்பார்ம் செய்துள்ளார். பார்ப்பதற்கு படுமோசமாக, நோய்வாய்ப்பட்டது போல ஒல்லி பெல்லியாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு உங்களுக்கு என்ன தான் ஆயிற்று எனவும் கேட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா அதுல்யா ரவி.. போட்டோஸ் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios