இந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் ராய் லட்சுமி. இந்த அளவிற்கு இவர் உருமாற்றம் ஆவதால் பட வாய்ப்புகள் குவியாவா போகிறது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் மாடலாக அறிமுகமாகி தற்போது அறியப்படும் நாயகிகளில் ஒருவராக உள்ளார் ராய் லட்சுமி. இவர் முதல் முதலில் ஆர் வி உதயகுமார் இயக்கிய குறும்படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். வால்மீகி என்னும் குறும்படத்தை தொடர்ந்து ஆர் வி உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பின்னர் பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க, பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ராய் லட்சுமி தாம் தூம், நான் அவன் இல்லை, வாமணன், முத்திரை, இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், அரண்மனை, சவுகார்பேட்டை, மொட்ட சிவா கெட்ட சிவா, மேதை என அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். இருந்தும் முன்னணி நாயகியாக முடியவில்லை இவரால்.

மேலும் செய்திகளுக்கு...பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா அதுல்யா ரவி.. போட்டோஸ் இதோ

View post on Instagram

தமிழிலும் கவர்ச்சிகளைக் கொட்டி தீர்க்கும் முக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். இதனால் இவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர். வெள்ளை வெளேர் என இருக்கும் இவர் அரேபியன் குதிரையென ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். தற்போது ஆனந்த பைரவி, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு...’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்து... குழந்தையாக மாறிவிட்டேன்”.. பிரபாஸ் நெகிழ்ச்சி

View post on Instagram

அதோடு சோசியல் மீடியாவிலும் மிக ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் கடற்கரையில் பிகினியுடன் இவர் வெளியிடும் கண்கவர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக கடலுக்கு நடுவில் இருந்தபடி இவர் எடுத்துவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் நல்ல லைக்குகளை பெற்றது. இந்நிலையில் இவர் நீல நிற டைட் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் ராய் லட்சுமி. இந்த அளவிற்கு இவர் உருமாற்றம் ஆவதால் பட வாய்ப்புகள் குவியாவா போகிறது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View post on Instagram