பிரபல நடிகையும், உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளுமான  சுருதிஹாசன், லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை சமீப காலமாக காதலித்து அவரை திடீர் என பிரேக்அப் செய்தது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும், விஜய் சேதுபதியின் 'லாபம்' படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். மேலும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.  இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் ஸ்ருதிஹாசனிடம் திருமணம் எப்போது உங்களுக்கு என கேள்வி எழுப்பி, திருமண அழைப்பு விடுத்தால், நாங்கள் அனைவரும் உங்கள் திருமணத்தில் கலந்து கொள்வோம் என கூறினார்.

ரசிகரின் இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், என்னுடைய திருமணத்திற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள். சேர்ந்து கொண்டாடுவோம் என நச் என பதிலளித்துள்ளார்.