shruthihassan boy friend leave mumbai
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது கைவசம் ஒரே ஒரு இந்தி திரைப்படத்தை தவிர எந்த படங்களும் இல்லை என்றாலும், அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தன்னுடைய காதலருடன் சுதந்திரமாக் மும்பை பகுதியில் சுற்றி வந்தார்.
ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த, நடிகரை காதலித்து வருவதை வெளிப்படையாக ஒற்றுக்கொள்ள வில்லை என்றாலும், இவர் நடந்துக்கொண்ட விதத்தில் இருந்து, இவர்கள் காதல் அனைவராலும் புரிந்துக்கொள்ளப்பட்டது.
காதலரை தன்னுடைய அம்மா, அப்பா, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாலும் இதுவரை வெளிப்படையாக கூற மறுத்து வருகிறார். பத்திரிக்கையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினாலும், தன்னுடைய பர்சனல் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை என மூஞ்சில் அடித்தது போல் பதில் கூறி வருகிறார்.
தற்போது ஸ்ருதி மற்றும் அவருடைய காதலர் மைகல், பேசிக்கொண்ட பதிவு இவர்களுடைய காதலை மேலும் உறுதி செய்துள்ளது.
மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது என மைகள் கூற, "ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு வருத்தமாக உள்ளது என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
