பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஒரு மாதத்தை தாண்டி, வெற்றிகரமாக பல கோடி ரசிகர்களை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமல் ஹாசன் என்பது அனைவரும் அறிந்தது தான். தன்னுடைய தந்தை முதல் முதலாக தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான பிக் பாஸ்ஸை  நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்ப்பேன் என ஸ்ருதி ஹாசன் கூறி இருந்தார்.

தற்போது வரை அனைத்து பிரபலங்களும் ஆதரிக்கும் போட்டியாளராக இருப்பவர் நடிகை ஓவியா. கடந்த சில தினங்களாக ஓவியாவுக்கு சப்போர்ட் செய்து ஜூலியை திட்டி வரும் நடிகை ஸ்ரீ பிரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்துல "ஜூலி நீங்க வெளியில போக போறீங்க" என ட்விட் போட்டு இருந்தார்.

இந்த ட்விட் பார்த்த ஸ்ருதிஹாசன் "ரீ-ட்வீட்" செய்திருந்தார். இதில் இருந்து ஜூலி வெளியே போவதற்கு ஸ்ருதி தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார் என்பது தெரிகிறது.