உனக்கு 20 எனக்கு 18 என்கிற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா,  அதற்கு பின் மிக குறுகிய நாட்களிலேயே ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.

அதே போல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.

தற்போது அதிக வயதாகி விட்ட நடிகைகள் லிஸ்டில் இவர் இணைத்து விட்டதால் இவருக்கு சில வருடங்களாக படவாய்ப்புகள் குறைந்து விட்டது.

தற்போது சிம்புவிற்கு ஜோடியாக AAA படத்தில், மைக்கேல் என்கிற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல், இருந்த அவர், சமீபத்தில் வெளியான  துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

நரகாசூரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் எப்போது தொடங்கும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் யார் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.