கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கும் , வெளிமாநிலங்களுக்கும்  சென்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், வீட்டின் உள்ளேயே அவர்கள் தனிமையில் இருக்கும் படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீதான், படப்பிடிப்பிற்காக அடிக்கடி, சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு அதிக விமான பயணம் செய்துள்ளார். 

மேலும் இவர் சென்று வந்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு,  கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தையும், கர்நாடகாவை சேர்ந்த சுகாதார துறை அதிகாரிகள் வீட்டின் உள்ளேயே தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஷ்ரத்தா ஸ்ரீநாத்  தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டார்.  

தற்போது அவர்கள் சொல்ல 14 நாட்கள் மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து ஷ்ரத்தா தற்போது தன்னுடைய அம்மாவுடன் கிச்சனில் பிசியாக இருப்பதாக குஷியாக ட்விட் செய்து, அனைவரையும் பாதுகாப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.