என்.ஜி.கே  படம் குறித்த சரியான அப்டேட் விடாததால் ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், செல்வராகவனாச்சே அதான் ரசிகர்களும் காத்திருந்தனர். இந்நிலையில் என்.ஜி.கே. - நந்த கோபாலன் குமரன் பட டீஸர் காதலர் தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், என்.ஜி.கே. டீஸரை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே அதாவது இன்று வெளியாக இருந்த நிலையில் அதை யாரோ ட்விட்டரில் லீக் செய்தனர். 8 நொடி காட்சிகள் கசிந்தது. இதையடுத்து டீஸர் ரிலீஸ் நேரம் பிப்ரவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு பதில் இன்று காலை 10.30 மணிக்கு மாற்றப்பட்டது. என்.ஜி.கே. டீஸரை சூர்யா வெளியிட்டுள்ளார். 

டீச்சரின் தொடக்கத்தில், என் பெயர் நந்த கோபாலன் குமரன் என்று சூர்யா கூறுவதுடன், முழுக்க முழுக்க அரசியல் படம் என்பதால் கருணாநிதி, வைகோ, சோனியா, நல்லகண்ணு, வாஜ்பாய் போன்ற அரசியாக தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஜெயலலிதா படம் இல்லை.  டீஸரை வெளியிடும் முன்பே லீக்கானது சூர்யா ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. ஆனாலும், இந்த டீஸர் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல்.