தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.  தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நேற்று தமிழகத்தில் 3,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 1,834 பேர். இதுவரை 70 ஆயிரத்து 977 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 ஆயிரத்து 999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 911 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

 

இதையும் படிங்க:  உடலோடு ஒட்டி உறவாடும் உடை... ஹன்சிகா அசத்தல் கவர்ச்சியை பார்த்து மெழுகாய் உருகும் ரசிகர்கள்...!

இப்படி தீயாய் பரவும் கொரோனாவும், மற்றொரு பக்கம் மீண்டும் கடுமையாக்கப்படும் ஊரடங்குகளும் சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பீதியடைந்த சென்னைவாசிகள் பலரும் பைக்கிலேயே சொந்த ஊரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். சென்னை சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என தேடி வந்த பலரும், இன்று சென்னையை விட்டு தலைத்தெறிக்க ஓடும் நிலை உருவாகியுள்ளது. ஏழை, பணக்காரன் என எவ்வித பாகுபாடுமின்றி தொற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸுக்கு திரைத்துறையினர் மட்டும் விதிவிலக்கல்ல. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதும், திடீரென உயிர் இழப்பதும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

 

இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், பட விநியோகஸ்தருமான தனஞ்செயனின் அண்ணன் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது அண்ணன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவர் நல்ல உடல் நலத்துடன் தான் இருந்தார். அவருக்கு வயது 59. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5 நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். பத்திரமாக இருங்கள் நண்பர்களே என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

தனஞ்செயனின் இந்த ட்விட்டை பார்த்த பலரும் என்னங்க அண்ணன் இறந்திருக்கும் நிலையில் இப்படி ட்வீட் செய்கிறீர்களே? என விமர்சித்தனர். அதற்கு பதிலளித்துள்ள அவர், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எனது அண்ணன் குடும்பத்தினரை காக்க எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் விரைவில் குணமடைய தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்களும் பத்திரமாக இருந்து குடும்பத்தாரையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கும் எங்கும் வெளியில் செல்லாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.