பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளராக இருந்தாரோ கவின், அதற்கு மேல் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லும் போது ரசிகர்கள் கவின் மீது அதிக பாசம் காட்டினர்.

மேலும் லாஸ்லியா மற்றும் கவின் காதல் வெற்றி பெறவும் ஆசை படுவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், கவின் மற்றும் லாஸ்லியா, இதுவரை தங்களுடைய காதல் பற்றி பேசவே இல்லை. இதனால் சிலர்... இவர்கள் உள்ளே இருக்கும் போது நடித்தார்களா? என்கிற கேள்வியையும் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில்... தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள 'பிக்பாஸ்' கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினிடம், ரசிகர்கள் லாஸ்லியா மீது உள்ள காதல் பற்றி கேள்வி எழுப்பியதற்கு சற்றும் எதிர்பாராத பதில் கொடுத்து அதிரவைத்துள்ளார் கவின்.

இதுகுறித்து கவின் கூறியதாவது, தற்போது தனக்கு சில கடமைகள் இருப்பதால், மற்றதை பற்றி நினைக்க நேரம் இல்லை என கூறியுள்ளார். கவினின் இந்த பதில், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது, இன்னும் என்ன அதிர்ச்சிகள் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.