பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட், தற்கொலை செய்து கொண்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் அவருடைய நினைவுகள் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்கவில்லை. அதே நேரத்தில், இவருடைய தற்கொலைக்கு காரணம் இவருடைய காதலி ரியா சக்ரபோர்த்தி தான் என்கிற சர்ச்சையும் ஒரு பக்கம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

 மேலும் செய்திகள்: சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்பே இல்லை..! திட்டவட்டமாக கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு!
 

எனினும் இவர், மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து  கொண்டார் என மருத்துவ சான்றிதழில் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பிரபலம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மேலும் செய்திகள்: வாவ்... அசரவைக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீடு..! வாங்க பார்க்கலாம்..!
 

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அடியெடுத்து வைத்து, பின்னர் தொகுப்பாளினியாகவும் புகழ் பெற்றவர் பிரியா ஜூனேஜா. இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியா ஜூனேஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அவருடைய குடும்பத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரின் தற்கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வந்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பிரியா கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு குடும்ப பிரச்சனை ஏதாவது இருந்ததா என்கிற கோணத்திலும் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.