பிரபல நடிகர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!

றுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்காக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர்,  கடந்த இரண்டு நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில்  உறுப்பு செயலிழப்பு காரணமாக அவர் இன்று காலமானார்.

shocking famous actor death for sickness

'மான் கீ ஆவாஸ் ப்ரதிஜ்யா 2 ' நிகழ்ச்சியில், தாக்கூர் சஜ்ஜன் சிங் வேடத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் இன்று காலமானார். அவருக்கு வயது 63. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்காக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர்,  கடந்த இரண்டு நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில்  உறுப்பு செயலிழப்பு காரணமாக அவர் இன்று காலமானார்.

இவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம்,  கடுமையான சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை பில்களை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதால் அவரது சகோதரர் பண உதவிக்காக வேண்டுகோள் விடுத்தார். பின்னர் ஒருவழியாக குணமடைந்த இவர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்ய வேண்டியிருந்தது. 

shocking famous actor death for sickness

உடல் நிலை இப்படி இருந்த போதும் கூட 'மான் கீ ஆவாஸ் சீசன் 2 ' நிகழ்ச்சி 2021 இல் தொடங்கப்பட்டபோது அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டு வாரம் 3 நாட்கள் டயாலிசிஸ் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். உடல்நிலை சரியில்லாவிட்டாலும், தாக்கூர் சஜ்ஜன் சிங் வேடத்தில் நடித்து மக்களை கவர்ந்தார். இவருடைய இழப்பு பாலிவுட் திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

shocking famous actor death for sickness

உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரைச் சேர்ந்த இவர், 1993 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் பிரபல பாலிவுட் படங்களான தஸ்தக், தில் சே ..., லகான், கோல்மால் மற்றும் முன்னா மைக்கேல் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர், மேலும் 'மான் கீ ஆவாஸ் ப்ரதிஜ்யாவைத்' தவிர, ரிஷ்டே, டோலி அர்மனோ கி, கிருஷ்ணா சலி போன்ற நிகழ்ச்சிகள் மூலமும் பிரபலமானவர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios