சர்ச்சை நடிகையாகவும், கவர்ச்சி பாவையாகவும் சமூகவலைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் மீரா மிதுன். அப்படி பட்டவர் முதல்முறையாக இழுத்துப்போர்த்திக் கொண்டு பகிர்ந்துள்ள போட்டோவுக்கான கேப்சன் இப்போது அவருக்கெதிராக கேசரி கிண்ட வைத்து வருகிறது.

மீரா மிதுன் போடும் ஒவ்வொரு பதிவும் அணுகுண்டு ரகம். பிக்பாஸ் வீட்டுக்கு போய்வந்த பிறகு அம்மணி அசாதரண மனுஷியாகி விட்டார். தெருவில் தம் அடிப்பது, கடற்கரை ஓரத்தில் சரக்கடிப்பது... ஆண் நண்பருடன் கிஸ் அடிப்பது என அத்தனை போஸ்டுகளும் ரசிகர்கள் முகத்தில் பேஸ்து அடிப்பதை போன்ற உணர்வை தருபவை.

அப்படித்தான் தற்போது ’நான் புத்திசாலி பெண் என தற்பெருமை பேசியது மட்டுமில்லாமல் நான் எதை தொட்டாலும் தங்கமாகி விடும் என கூறி முதல் முறையாக முழு ஆடையுடன் போட்டோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓவர் தற்பெருமை உடம்புக்கு ஆகாது என மீராவை நேராகவே மூக்குடைத்து வருகின்றனர். 

அதில் ஒருவர்,  ’எங்க வீட்ல ஏகப்பட்ட தேவையில்லாத பொருட்கள் இருக்கு. கொஞ்சம் வந்து தொட்டுட்டு போனா போதும். ஒரு படம் நடிக்க ஆகுற சம்பளம் தருகிறேன். பின்குறிப்பு : தங்கமாய் மாறினால் மட்டுமே சம்பளம். இல்லையேல் என் வீட்டு வேலைக்காரியாக பணியமர்த்தப்படுவீர்’’ எனத் தெரிவித்துள்ளார்.