ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் விளையாடி வெளியேறிய ஓம் சுவாமி கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நிலையில் உடல்நல பிரச்சனை காரணமாக தற்போது உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் விளையாடி வெளியேறிய ஓம் சுவாமி கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நிலையில் உடல்நல பிரச்சனை காரணமாக தற்போது உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் ஓம் சுவாமி. கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டார். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு AIIMS மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த இவர், இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த ஓம் சுவாமி, சக போட்டியார் பானி ஜே-விடம் அருவருக்க தக்க வகையில் நடந்து கொண்டதால், ஒட்டு மொத்த மக்களாளிடமும் வெறுப்பை சம்பாதித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் உடல் நலம் முடியாமல் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தற்போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.