தல அஜித்தின் பெயர், அவர் நடித்த படங்களின் பெயர், அவரின் உருவம் என உடல் முழுவதும் பச்சை குதி கூடாது மட்டும் இன்றிதன்னுடைய பெயரை கூட தல பிரகாஷ் என மாற்றி கொண்ட தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தல அஜித். வலிமை பட அப்டேட் வேண்டும் என்று இவர்கள் செய்த அலப்பறை கொஞ்சம் நஞ்சம் இல்லை, திருசெந்தூர் முருகன் கோவிலில் துவங்கி, எடப்பாடி பழனி சாமி, பிரதமர் மோடி, கிரிக்கெட் அஸ்வின் என பட்டியல் நீண்டு கொண்டேனா செல்லும். பின்னர் அஜித் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகே கொஞ்சம் அடங்கியுள்ளன.\

இந்த நிலையில் அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவர் தல பிரகாஷ். இவர் தனது கை, இடுப்பு, மார்பு, முகம் என பல பகுதிகளில் அஜித்தின், பெயர், முகம், அவரது படத்தின் பெயர், சூப்பர் ஹிட் வசனங்கள் வரை என உடலின் பகுதிகளில் அஜித் டாட்டூவை வரைந்திருந்தார். அந்த அளவுக்கு வெறித்தனமான அஜித் ரசிகராக இருந்தவர் பிரகாஷ்.

இவர் இன்று திடீரென தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அஜித் ரசிகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.