நடிகர் பிரபுவின் (Prabhu) முக்கிய குடும்பத்தினர் ஒருவர், மரணமடைந்துள்ள சம்பவம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் பிரபுவின் முக்கிய குடும்பத்தினர் ஒருவர், மரணமடைந்துள்ள சம்பவம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் எப்போதும் அன்போடு பழக கூடியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான இளைய திலகம் பிரபு. எப்போதுமே அனைவரிடமும் மிகவும் அக்கறையோடு நடந்து கொள்பவர். இவருடைய, குடும்பத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மரணம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: வைகை புயல் வடிவேலுவை சந்தித்த பிரபலம் பிக்பாஸ் 5 பிரபலம்! அட கூட இவங்களும் இருக்காங்களே.. வைரலாகும் புகைப்படம்

அதாவது இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகர் பிரபுவின் துணைவியார் புனிதா அவர்களின் அம்மாவும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சம்மந்தி இன்று உடல்நல குறைவு காரணமாக காலமாகிவிட்டார். புனிதாவின் தாயார் திருமதி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை என்ற பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது சொந்த ஊரிலேயே இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் கேபிக்கு அடித்த ஜாக்பாட்! விஜய்டிவின் சூப்பர் ஹிட் சீரியலில் இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாகிறார்!

தன்னுடைய குடும்பத்தினரை இழந்து வாடும், நடிகர் பிரபு குடும்பத்தினருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.