shocking actor adhi met with an accident?

நடிகர் ஆதி தான் நடித்த முதல் தமிழ் படமான 'மிருகம்' படத்திலேயே சிறந்த நடிகர் என பெயர் பெற்றவர். இவரது எதார்த்தமான நடிப்பை பார்த்து பாராட்டாதவர்கள் யாரும் இல்லை என கூறலாம். 

ஆதியை அழகிய ஹீரோவாக ரசிக்க வைத்தப்படம் 'ஈரம்' இதை தொடர்ந்து இவர் நடித்த அய்யனார், ஆடுபுலி, அரவான் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதனால் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த 'மரகதநாணயம்' திரைப்படம் வெற்றி பெற்றது. தெலுங்கில் இவர் கேரக்டர் ரோல்களில் நடித்த நின்னுகோரி, மற்றும் அஞ்ஞாதவாசி ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது.

இந்நிலையில், நடிகர் ஆதி கார் விபத்தில் சிக்கியதாக சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் 'எனக்கு எந்த விபத்தும் நேரவில்லை. என்னைப்பற்றி வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை என்று தெரிவித்தார்'.

இதனால் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ள ஆதி, அடுத்த படத்திற்காக தன்னை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Scroll to load tweet…