நடிகர் பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி.இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவர் கதாநாயகியாக நடிக்க வில்லை என்றாலும், தளபதி நடிப்பில் வெளியான 'குஷி' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.தற்போது 44 வயதாகும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

இவர்களுக்கு 2012ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. 8 வயதாகும் அந்த குழந்தைக்கு வியான் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெண் குழந்தைக்கு தாய் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தைக்கு  சமிஷா ஷெட்டி என பெயர் வைத்துள்ளார். மேலும் சமஸ்கிருதத்தில் ‘சா’ என்பது “வேண்டும்”, என்கிற அர்த்தத்தை குறிப்பதாகவும், ரஷ்ய மொழியில் ‘மிஷா’ என்பது “கடவுளைப் போன்ற ஒருவரை” குறிக்கிறது என தன்னுடைய குழந்தையின் பெயருக்கு அர்த்தம் கூறியிருந்தார் ஷில்பா ஷெல்பா.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

இதுவரை வாடகை தாய் மூலமாக இரண்டாவது குழந்தை பெற்றது எதற்காக என முதல் முறையாக ஷில்பா ஷெட்டி மனம் திறந்துள்ளார். அதாவது “எனது மகனுக்கு சகோதர உணர்வோடு கூடிய மற்றொரு சொந்தம் இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். அதனால் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாரானேன். ஆனால் இரண்டு முறை கருத்தரித்த போதும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. மீண்டும் குழந்தை பிறப்பது மிகவும் கஷ்டம் என்பதை உணர்ந்தேன். எனவே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று யோசித்தேன். அதுவும் அமையவில்லை. இதைத்தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.