shegan given certificate to july that she is dirty
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென எட்டு விருதுகள் சினிமா பாணியில் வழங்கப்பட்டது. அதை ரகசியமாக வைத்திருந்து மேடையில் அறிமுகப்படுத்தினார்கள்.
இதில் ஜூலிக்கு அசுத்தமானவர் அன் ஹைஜினிக் என்ற விருதை ஸ்னேகன் வழங்கினார்.
கடந்த வாரம் 25 தேதி உலக நாயகன் கமலஹாசன், தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்த நிகழ்ச்சியான "பிக் பாஸ்" ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட சில நாட்களிலேயே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
பலர் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட காரணம் டிஆர்பியை ஏற்ற தான் என கூறிவருகின்றனர்.
நேற்று இந்த நிகழ்சியை தடை செய்ய வேண்டும் என கூறி இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டில் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தி கத்தியே பிரபலமான ஜூலியை அசிங்கப்படுத்தும் விதமாக அவருக்கு அசுத்தமானவர் விருதை கொடுத்துள்ளார் பிக் பாஸ் டீம் தலைவர் கவிஞர் சினேகன்.
ஏன் இப்படி ஒரு விருதை அவருக்கு கொடுத்தார் என தற்போது வரை பல நெட்டிசென்கள் குழம்பி வருகின்றனர்.
ஜூலியும் கொஞ்சம் கூட கோபப்படாமல் இந்த விருதை சிரித்த முகதோடு அவர் கொடுத்த டாய்லெட் பொறித்த விருதை ஏற்றுக்கொண்டார்.
தனது குழுவை அவர் முறையாக பராமரித்து சுத்தமாக பாத்திரங்களை கழுவாமல் இருந்ததற்காக இந்த அவார்ட் என ஸ்னேகன் கூறினார்.
ஜூலி அதை ஏற்றுக்கொண்டு அன் ஹைஜினிக் என்ற விருதில் அன் (UN) என்ற வார்த்தை இல்லாமல் ஹைஜினிக் என்ற விருதை வரும் நாளில் வாங்குவேன் என்றார் ஜூலி.
