பாலிவுட் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்   நடிகர் ஷாருக்கான். இவர் பாலிவுட் திரையுலகை தாண்டி 'ஹேராம்', 'உயிரே', போன்ற கோலிவுட் படங்களிலும் நடித்துள்ளதால் இவருக்கு தமிழ் திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இவருக்கு ஒரு மகளும் இரண்டு மகனும் உள்ளனர்.  18 வயதாகும் இவருடைய மகள் எப்போது திரையுலகில் கால் பதிப்பார் என்பது தான் பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. எனினும் இவர் விரைவில் ஷாருக்கானின் நண்பரான கரண் ஜோகர் இயக்கத்தில் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அடிக்கடி பார்ட்டி, பப், என்று சுற்றும் ஷாருகானின் மகள் சுஹானா  வெளியில் சென்றால் கூட கவர்ச்சியான ஆடைகளை தான் அணிந்து செல்வார்.

அவ்வாறு செல்லும் போது பல முறை மீடியாவின் கண்களில் சிக்கி அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவந்தன சில மாதங்களுக்கு முன்பு கூட இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. 

மேலும் கடந்த மாதம் இவர், பிரபல புத்தகத்தின் அட்டை படத்திற்கு கவர்ச்சி ததும்பும் போஸ் கொடுத்திருந்தார். இதனை அவரது தந்தை ஷாருகான் வெளியிட்டு தன்னுடைய மகளை பற்றி மிகவும் பெருமையாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுஹானா கான்.  தோழிகளுடன் பார்ட்டிக்கு சென்று குடித்து விட்டு கும்மாளம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சிலர் விமர்சித்து வந்தாலும். சிலர் இவருக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.