இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார்ராக வளம் வருபவர் நடிகர் ஷாருக்கான், இந்நிலையில் இன்று அவர் நடித்த 'ரயீஸ்' படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கானிடம் நீங்கள் ஏன் சமீபகாலமாக ரொமான்ட்டிக் படங்களில் நடிப்பதில்லை என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், நான் ரொமான்ஸ் செய்யும் வயதை கடந்து விட்டேன் என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார், மேலும் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு அதுபோன்ற வாய்ப்புகளை கொடுத்து ஒதிங்கி கொள்வது தான் மூத்த நடிகர்களுடைய கடமை என கூறி அனைவருடைய கை தட்டல்களையும் அள்ளினார்.

மேலும், தற்போது இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படத்தில் தனக்கு பொருந்த கூடிய மக்கள் ஏற்று கொள்ளும் வகையில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதாக தெரிவித்தார்.

நடிகர் ஷாருகான் நடிப்பில் கடைசியாக 'ஜப் தக் ஹே ஜான் ' என்கிற ரொமான்ட்டிக் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடதக்கது.