என்னது? ஹீரோவா மாத்துவீங்களா? சேனாபதி இல்லாமல் இந்தியன் 2 வா? கமலால் கடுப்பான ஷங்கரை சமாதானப்படுத்திய லைகா, கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

பிளாக்பஸ்டர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட கைவிடப்படும் நிலைக்கு சென்றேவிட்டது லைகா நிறுவனத்தின், உலகநாயகன் கமல்ஹாசனை ஹீரோவாக நடிக்க, ஷங்கர் இயக்கும்‘இந்தியன் 2’ படத்துக்காக  டேட்ஸ் கொடுத்துவிட்டு காத்திருந்த காஜல் அகர்வாலும் ஏமாற்றத்தோடு சென்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் லைகா சுபாஷகரனும், இயந்க்குனர் ஷங்கரும் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லாம் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது. இந்த மீட்டிங்கில் பட்ஜெட் முதல் எல்லாவற்றையுமே பேசி முடித்தனர். ஓகே சொன்னபடி கிளம்பிய நிலையில் இந்த புராஜெக்ட்  மீண்டும் அந்த ப்ராஜெக்ட் கையிலெடுக்கப்பட்டது. 

பொத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கிரிப்ட் ஃபோல்டர்களை மீண்டு திறந்தார் ஷங்கர், அடுத்தகட்டமாக ஹீரோ கமல்ஹாசன் முதல் பிரதான ஜூனியர் ஆர்டிஸ்டுகள் வரை அனைவருக்கும் ஷூட் போகலாம் என தானே கால் செய்து சொன்னாராம். அனைவரும் இதை எதிர்பார்த்தது போல ஓகே சொன்னார்களாம். ஆனால் உலகநாயகன் மட்டும் ஊம் ஹூஹூம் கூட சொல்லலையாம். 

ஆம் இந்தியன் படத்தின் ஈடு இணையில்லா நாயகண்ணா அது உலகநாயகன் தானே?. சைலண்ட்டாக தகவலை வாங்கிக்கொண்டு ரிப்லை கூட சொல்லாமல் அப்படியே கிடப்பதாக சொல்லப்படுகிறது. பொறுத்துப் பார்த்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், கடுப்பின் உச்சத்துக்குப் போயி சார் வர்றாரா? இல்ல நான் ஹீரோவை மாத்தட்டுமா?  இது ஷங்கர் மட்டும் சார்ந்த விஷயமில்ல. பல பேரோட வாழ்க்கையும் இந்த ப்ராஜெக்ட்டை நம்பி இருக்கு. 

மறுபடியும் இந்த படம் டிராப் அப்படிங்கிற வளையத்துக்குள் சிக்கி, என் பெயர் டேமேஜாக நான் விரும்பல, ஆனாலும் இதை காதில் கூட வாங்காத உலகநாயகன் பிக்பாஸ், அரசியல்  வேளைகளில் பிசியாக இருக்கிறாராம். சேனாபதி இந்தியன் தாத்தா இல்லாமல் இந்தியன் 2 வா!  விவெயிட் பண்ணுங்க ஷங்கர் சார் ஆண்டவர் வருவாரு என தயாரிப்பு தரப்பு சமாதான முயற்சியில் இறங்கியிருக்கிறாம்.