Asianet News TamilAsianet News Tamil

ஷங்கர் - ராம் சரண் படத்தை 350 கோடிக்கு வாங்கியதா பிரபல நிறுவனம்? தீயாய் பரவும் தகவல்!

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் 350 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

shankar directing ram charan movie satellite rights will be sold 350 cores?
Author
Chennai, First Published Nov 22, 2021, 7:18 PM IST

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் 350 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் ஹீரோக்களை வைத்தே இதுவரை படம் எடுத்துக்கொண்டிருந்த ஷங்கர், தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கம் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் கார்த்தி சுப்புராஜிடம் இருந்து பெற்றுள்ளார். இது தன்னுடைய கதை என, கார்த்தி சுப்புராஜின் துணை இயக்குனர் ஒருவர் கூறியதால் பரபரப்பும் ஏற்பட்டு பின்னர் அடங்கியது.

shankar directing ram charan movie satellite rights will be sold 350 cores?

இந்நிலையில் ஒருவழியாக அனைத்து பிரச்னையும் முடிவுக்கு வந்து, செப்டம்பர் மாதம் ஷங்கர் ராம் - சரண் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு, பூனேவில் துவங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு மட்டுமே எடுத்து முடிக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

shankar directing ram charan movie satellite rights will be sold 350 cores?

நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஜெயராம், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைப்பில், திரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு இதுவே பெயரே வைக்காத நிலையில், இந்த படத்தை சுமார் 350 கோடிக்கு பிரபல ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

shankar directing ram charan movie satellite rights will be sold 350 cores?

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமை, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும். ஆனால், வெளிநாட்டு விநியோக உரிமை, பாடல்கள், ரீமேக் உரிமை இதுவரை விற்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகாத நிலையில், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios