Indian 2 Review: இந்தியன் தாத்தாவாக கமல் சாதித்தாரா? சருக்கினாரா? 'இந்தியன் 2' படத்தின் ரசிகர்களின் விமர்சனம்!
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்களே கூறிய விமர்சனந்த்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது 'இந்தியன் 2'. முதல் பாகத்தில் சேனாதிபதி - சந்துரு என இரட்டை வேடத்தில் கலக்கிய கமல்ஹாசன், இரண்டாம் பாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் சேனாதிபதியாக சிங்கிளாக வந்து கலக்கி உள்ளார். முதல் பாகத்தின் இமாலய வெற்றியால்... இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், டிக்கெட் புக்கிங் திறக்கப்பட்ட உடனேயே பெருவாரியான டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன.
இன்று வெளியாக உள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் சிறப்பு காட்சி தமிழகத்தில் 9 மணிக்கு தான் துவங்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. எனவே மற்ற மாநிலங்களில் 'இந்தியன் 2' படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் சென்றனர்.
கமல்ஹாசனை தவிர காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க லைகா மற்றும் ரெட் ஜெயிட் மூவி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குனர் ஷங்கரின் மெர்சல் பண்ணும் இயக்கத்தில் ... இந்தியன் தாத்தாவாக வந்து கமல் சாதித்தாரா இல்லை சோதித்துள்ளாரா? என்பதை ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் மூலம் பார்க்கலாம்.
ரசிகை ஒருவன் 'இந்தியன் 2' படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு போட்டுள்ள பதிவில், இதுவரை 'இந்தியன் 2' திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது. கமல்ஹாசனுக்கு கண்ணியமான அறிமுகம் இருந்தது. அனிருத்தின் பிஜிஎம்முடன், இடைவேளை சீக்வென்ஸ் அருமை. நீண்ட முடியுடன் இருக்கும் சேனாபதியின் கெட்-அப் சரியாக வரவில்லை. வலுவான இரண்டாம் பாதி தேவை என கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர், 'இந்தியன் 2 படத்தில் உத்வேகம் இல்லை, உணர்ச்சிகளின் இணைப்பு இல்லை. ஷங்கர் படம் என்பதற்கான அறிகுறியே இல்லை. உண்மையில் இது ஷங்கர் படமா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி அதிர வைத்துள்ளார்.
முதல் பாதி நன்றாக முடிந்துள்ளது. பாடல் காட்சிகளில் சங்கர் சாயல் தெரிந்தது. அனிருத்தின் BFM சூப்பர். கமல்ஹாசன் என்ட்ரி நெருப்பாக இருந்தது. சித்தார், ப்ரியா பவானி ஷங்கர், தங்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். முதல் பாதி இந்த படத்தின் அடித்தளத்தை அமைப்பதாக உள்ளது" என கூறியுள்ளார்.
இதே ரசிகர்கள் இரண்டாம் பாதி குறித்து போட்டுள்ள பதிவில், 'இரண்டாம் பாதி முழுக்க உணர்ச்சிகள் நிறைந்ததாக உள்ளது. அனிரூத் இசை நெருப்பாக உள்ளது என எமோஜி மூலம் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்கேட்போர்டு வரிசை நன்றாக செயல்படுத்தப்பட்டது. கமல்ஹாசனின் பாடி பில்டர் சண்டை அவ்வளவாக எடுபடவில்லை. இந்தியன்3 டிரெய்லர் சுவாரசியமாக இருந்தது என கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகரோ, "இது நிறைய கருத்துக்களை கொண்ட ஒரு அற்புதமான திரைப்படம், கமல்ஹாசன் உண்மையில் ஸ்டீல் மேனாக நிற்கிறார். சங்கர் இயக்கம் சிறப்பானது. பிளாக் பஸ்டர் லோடிங் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிபிடித்தக்கது. ஒரு சிலர் ஆண்டவருக்கு எதிராக பொய்யான விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் எனவே திரையரங்கம் சென்று படம் பார்க்கும்படி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.