Shankar - Ajith joins the Chief - 2. Is it true? Some Reality Facts ...
சங்கர் இயக்கத்தில் ‘முதல்வன் 2’ படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘விவேகம்’ படத்தை அடுத்து அஜீத்தை வைத்து இயக்க பலரும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
தற்போது அஜித் ஆபரேஷன் செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கிறார். தனது அடுத்த படத்திலும் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன் மற்றும் சிவா இருவரில் ஒருவரது படத்தில் அஜித் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. மீண்டும் சிவாவுடன் இணைந்தால் ரசிகர்களே கடுப்பாவார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் ‘முதல்வன் 2’ படத்தை அஜித்தை வைத்து இயக்கவிருப்பதாகவும், அந்தப் படத்தை, ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை இது உண்மை என்றாலும், அஜித் தற்போது முழு ஓய்வில் இருக்கிறார். இயக்குனர் சங்கர் ‘2.0’ படத்தின் இறுதிக்கட்டப் பணியில் பிஸியாக இருக்கிறார்.
சங்கரின் இயக்கத்தில் அஜித் நடிப்பது என்று பார்த்தாலும் எப்படியோ அடுத்த வருடம் தான் படத்தின் பணிகளே தொடங்குவர். அதற்குமுன் அஜித்திடம் கதை சொல்ல வேண்டும். அதுவும் இந்த வருடத்தில் சாத்தியமில்லை.
அஜித் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் ஒருபடம் வித்தியாசமான கதைக் களத்தில் அஜித். என பல்வேறு அம்சங்கள் கூடினாலும் இரண்டு வருடம் காத்திருப்பது என்பது அஜித் ரசிகர்களுக்கு சற்றே தல வலியை உண்டாக்கும்.
