மலையாள நடிகர் ஷேன் நிகம் ஹீரோவாக நடித்து வரும் ஹால் திரைப்படத்தில் இடம்பெற்ற 19 காட்சிகளை திருத்தச் சொல்லி சென்சார் போர்டு அறிவுறுத்தியதால் படக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளது.

Shane Nigam Haal controversy : ஷேன் நிகம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான 'ஹால்' சென்சார் சிக்கலில் சிக்கியுள்ளது. படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவும், பீஃப் பிரியாணி சாப்பிடும் காட்சியை அகற்றவும் சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. மொத்தம் 19 திருத்தங்களை சென்சார் போர்டு பரிந்துரைத்துள்ளது. ஆனால், சென்சார் போர்டின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தயாரிப்பு நிறுவனமான ஜேவிஜே புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

அறிமுக இயக்குனர் வீரா இயக்கும், ஷேன் நிகம் நடிக்கும் 'ஹால்' செப்டம்பர் 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. ஷேன் நிகத்தின் திரைப்பயணத்திலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் 'ஹால்' படத்தில் சாக்ஷி வைத்யா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹால் திரைப்படம்

ஜானி ஆண்டனி, நத், வினீத் பீப்குமார், கே. மதுபால், சங்கீதா மாதவன் நாயர், ஜாய் மேத்யூ, நிஷாந்த் சாகர், நியாஸ் பெக்கர், ரியாஸ் நர்மகலா, சுரேஷ் கிருஷ்ணா, ரவீந்திரன், சோஹன் சீனுலால், மனோஜ் கே.யு, உன்னிராஜா, ஸ்ரீதன்யா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மலையாளம் தவிர ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படம் ஒரு முழுமையான கலர்ஃபுல் என்டர்டெய்னராக இருக்கும் எனத் தெரிகிறது. பாலிவுட்டின் பிரபல பாடகர் அங்கித் திவாரி முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகும் படமும் இதுதான்.

சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் பாடல் ரசிகர்களை ஈர்த்தது. 'ஹால்' படத்தின் படப்பிடிப்பு 90 நாட்கள் நீடித்தது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படம் ஜேவிஜே புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாராகிறது. 'ஹால்' படத்தின் கதையை நிஷாத் கோயா எழுதியுள்ளார். 'ஆர்டினரி', 'மதுர நாரங்க', 'தோப்பில் ஜோப்பன்', 'ஷிக்காரி ஷம்பு' ஆகிய படங்களுக்குப் பிறகு நிஷாத் கோயா எழுதும் படம் 'ஹால்'. திங்க் மியூசிக் இதன் மியூசிக் பார்ட்னராக உள்ளது.