பெற்றோரை மீறி, நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு கஷ்டங்களை தாண்டி சினிமாவில் நடிக்க வாய்ப்பை பெற்றவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் பட்ட கஷ்டங்களுக்கு கை மேல் பலன் கொடுக்கும் வகையில் முதல் படமான, அர்ஜுன் ரெட்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். 

இந்த படம் இவருடைய மார்க்கெட்டை உயர்த்தி விட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என தற்போது கைவசம் அரை டஜன் படங்களில் கமிட் ஆகியுள்ளார். 

தமிழில் இவர் நடிப்பில் விரைவில், 100 % லவ், கொரில்லா, ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. மேலும் அக்கினி சிறகுகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதே போல் பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது "மெரி நிம்மோ" மற்றும் "ஹெலிகாப்டர் ஏலா" என்கிற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில பாலிவுட் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.

திரையுலகில் அறிமுகமான ஓரிரு வருடங்களிலேயே ஷாலினி பாண்டே சர சர வென வளர்ந்து வருவதை பார்த்து, பல நடிகைகள் இவரை வியந்து பார்த்து வருகிறார்களாம்.