shalini food serve the vijay wife sangeetha

விஜய், அஜித் ரசிகர்கள் எப்போதுமே ஒருவரை ஒருவர் தாக்கி பேசி சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஒரு சிலர் நேரிலும் மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்தது உண்டு.

ஆனால் அஜித்தும், விஜயும் எப்போதுமே நல்ல நண்பர்களாக தான் பழகி வருகின்றனர். இருவருடைய படப்பிடிப்புகளும் ஒரே இடத்தில் நடந்தால் விஜய் மற்றும் அஜித் ஒருவரை ஒருவர் சந்திக்க மறந்ததே இல்லை.

அப்படி தான் மங்காத்தா படப்பிடிப்பின் போது ஒரு முறை அஜித் தன்னுடைய கையால் செய்த பிரியாணியை விஜய்க்கு பரிமாறினார்.

அதே போல அவர்களுடைய மனைவிகள் ஷாலினி மற்றும் சங்கீதா இருவரும் சகோதரிகள் போல தான் பழகி வருகின்றனர்.

அதனை உறுதிப்டுத்தும் வகையில், ஒரு விழாவில் இருவரும் காலத்து கொண்டு, பாசமாக உணவு பரிமாறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

கோலிவுட்டில் மிக அதிகமான ரசிகர்களை கொண்ட இவர்களுடைய மனைவிகள் எந்த ஒரு ஈகோவும் இன்றி சகோதரிகளாய் பழகி வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.