Shahrukhans house Abeyas Income Tax Department


பாலிவுட் கிங்

பாலிவுட் கிங் என்றழைக்கப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் தொடக்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் பாலிவுட் திரையுலகில் நுழைந்து தனது உழைப்பாலும், திறமையாலும் முன்னணி இடத்தை அடைந்தவர்.

ரியல் எஸ்டேட்

ஷாருக்கான் கௌரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஷாருக்கான் சினிமா மூலம் ஈட்டும் வருமானத்தை ரியல் எஸ்டேட் தொழில் மூலம் முதலீடு செய்து வருகிறார். இவருக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல பண்ணை வீடுகள் சொந்தமாக உள்ளன.

பண்ணை வீடு

அலிபக் எனும் கடலோரப்பகுதியில் உள்ள ஷாருக்கானின் பண்ணை வீடு சுமார் 20 ஆயிரம் ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த பண்ணை வீட்டின் மதிப்பு சுமார் 250 கோடியாகும். ஆனால் இந்த பண்ணை வீட்டை ஷாருக்கான் வேறு ஒருவரது பெயரில் நிர்வகித்து வந்தார்.


நடவடிக்கை

இதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஷாருக்கான் இந்த பண்ணை வீட்டுக்கு உரிய அனுமதிகளை பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சட்டம் பிரிவு 24ன் கீழ் நடவடிக்கை எடுத்து, அந்த பண்ணை வீட்டை முடக்கினர். தற்போது அந்த பண்ணை வீடு பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.

படத்தில் மிக நல்லவனாக தோன்றும் ஷாருக்கானே இப்படிப்பட்ட காரியத்தை செய்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.