Shahrukh Khans Devdas movie is being rereleased in 3d
பாலிவுட்டின் சூப்பார் ஸ்டார் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்ஷித் இணைந்து நடித்த காவியத் திரைப்படமான 'தேவதாஸ்' திரைப்படம் 3-டியில் ரீரிலீஸாகிறது.
தேசிய புகழ் பெற்ற இயக்குனர் சஞ்சய் லீலா பன்ஷாலியின் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் 'தேவதாஸ்'.
தேவதாஸ் - பாரவ்தி காதல் காவியத்தை மையமாகக் கொண்டு உருவான 'தேவதாஸ்' திரைப்படத்தில் ஜாக்கி ஷ்ரோப், கிரண் கேர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 3-டி வடிவில் வெளியாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேவதாஸ் படத்தின் ரசிகர்கள் இதனைக் காண ஆராவாரமாக உள்ளனர்.
