Jersey movie : இந்தியில் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பின் காரணமாகவும், போதிய திரையரங்குகள் கிடைக்காததன் காரணமாகவும் ஜெர்ஸி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
பான் இந்தியா படங்களுக்கு பாலிவுட்டில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அங்கு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல் அண்மையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது.

அடுத்ததாக யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு இந்தியில் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே செல்வதால், இப்படத்தின் இந்தி பதிப்பு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.
கே.ஜி.எஃப் 2 படத்துக்கு போட்டியாக ஷாகித் கபூர் நடித்துள்ள ஜெர்ஸி படமும் ரிலீசாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தற்போது ஜெர்ஸி படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டு உள்ளது. இப்படம் ஒரு வாரம் கழித்து, அதாவது ஏப்ரல் 22-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியில் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பின் காரணமாகவும், போதிய திரையரங்குகள் கிடைக்காததன் காரணமாகவும் ஜெர்ஸி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. ஒரு டப்பிங் படத்திற்கு அஞ்சி ஒரு பாலிவுட் படமே பின்வாங்குவதைப் பார்க்கும் போது சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இதையும் படியுங்கள்... Nelson : பீஸ்ட்டை பற்றி மாத்தி மாத்தி பேசும் நெல்சன்... பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு போல..!
