ஷாருக்கான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

பாலிவுட்டில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் ஷாருக்கான். இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே முன்னணி ரோலில் நடித்துள்ள பதான் படம் பல சர்ச்சைகளைக் கடந்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி ரூ.800 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்தது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பதான் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி காரணமாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் கலந்து கொண்டனர்.

தீபிகா படுகோனே வெளியிட்ட வீடியோவில் தான் பயன்படுத்தக் கூடிய அழகு சாதன பொருட்களுடன் தீபிகா படுகோனே போஸ் கொடுத்தார். அதே போன்று, ஷாருக்கானும் போஸ் கொடுத்தார். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நடந்த வெற்றி கொண்டாட்டத்திலும் ஷாருக்கான் அதே நீல நிற வாட்ச் அணிந்து வந்திருந்தார். அப்போது அவர் கையில் கட்டியிருந்த நீல நிற வாட்ச் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதுமட்டுமின்றி அந்த வாட்சின் விலை குறித்தும் சமூக வலைதளங்களில் ஆராயப்பட்டது. அப்படி ஆராய்ந்ததில், Audemars Piguet’s Royal Oak Perpetual Calendar என்ற பிராண்ட் கொண்ட அந்த வாட்சின் விலை ரூ.4.94 கோடி என்று தெரியவந்துள்ளது. 

இந்த கடிகாரத்தில் விலை தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குரோனோ 24 என்ற இணையதளத்திலும் வாட்சின் விலை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நேரத்தை அளவிடும் அறிவியல் ரீதியான வாட்ச்களில் இது அரிதான ஒன்றாகும். பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் ஜவான் மற்றும் டன்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வரும் ஜூன் 2 ஆம் தேதி ஜவான் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.