நடிகை ஒருவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில், அவரது முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பையை சேர்ந்த நடிகை ஒருவரின் மகளுக்கே இந்த தொல்லை நிகழ்ந்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத அந்த நடிகையிடம், கன்ஹையா குமார் ஜா என்ற 32 வயதான நபர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். 

சில ஆண்டுகளுக்கு முன், அவர் ஒழுங்கீனம் காரணமா, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி நடிகையின் மகள் தந்த புகாரே காரணம் எனக் கூறப்படுகிறது. 

இதனால், நடிகையின் மகளை சந்தித்து, அவரது கவனத்தை ஈர்த்தால், அல்லது மனதை மாற்றச் செய்தால், மீண்டும் கார் டிரைவர் வேலை கிடைக்கும் என, கன்ஹையா குமார் நினைத்துள்ளார். 

இதன்பேரில், கடந்த 25ம் தேதியன்று நடிகையின் மகள், காலை நேரத்தில் ஜாக்கிங் சென்றுள்ளார். இதைப் பின்னாடியே கண்காணித்து வந்த கன்ஹையா குமார், அவரை நிறுத்தி, தனது கோரிக்கையை தெரிவித்துள்ளார். 

ஆனால், நடிகையின் மகள் இதை மறுத்துவிட்டார். இதனால், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கன்ஹையா குமார், திடீரென அந்த பெண்ணின் உடல் பாகங்களை தொட்டு, வெறுப்பேற்றியுள்ளார். அவர் கூச்சலிட்டதால், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணின் வாட்சாப் எண்ணை தொடர்புகொண்ட, கன்ஹையா குமார், மீண்டும் வேலை தரும்படி கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால், நடிகையின் மகள் திட்டவே, உடனே, கன்ஹையா குமார், அவரை ஆபாசமா திட்ட தொடங்கியுள்ளார். பலவித குறுஞ்செய்திகளையும் அவர் அனுப்பியுள்ளார். 

இதுபற்றி, சம்பந்தப்பட்ட நடிகையின் குடும்பத்தார், போலீசில் புகார் தந்தனர். உடனடியாக, பாலியல் புகாரில், கன்ஹையா குமார் ஜாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.