பொதுவாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் நடிகைகள் பாடு சொல்லவே வேண்டாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் பிரபல டிவி நடிகை டீனா தத்தா விமானத்தில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் அவரை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

ஒரு தடவை தெரியாமல் என்று கூறி தப்பித்த அந்த நபர் மீண்டும் அதேபோல் செய்துள்ளார்.

இதனால் டீனா பணிப்பெண்ணை அழைத்து புகார் தெரிவிக்க அவரோ இது எல்லாம் நடக்கத் தான் செய்யும் என சாதாரணமாக தெரிவித்துள்ளார்.

டீனாவோ உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன், ஆனால் இதுபோன்ற கொடுமை நடக்கவில்லை என்றும் பெண்களுக்கு இந்த உலகத்தில் பாதுகாப்பே இல்லையா என்று பொங்கி எழுத்துள்ளார்.