பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிய பிரபலங்கள்தன்னுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த வீடியோக்களை வெளியிட்டு பணமாக்க நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி முடிவெடுத்துள்ளார். பட வாய்ப்புகள் இல்லை, வாய்ப்பு தர அனைவரும் மறுக்கின்றனர், என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டனர் என்று புலம்பிக் கொண்டிருந்த ஸ்ரீரெட்டிக்கு கடைசியாக ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் அந்த படத்தில் ஸ்ரீரெட்டியாகவே ஸ்ரீரெட்டி நடிப்பது தான் விஷேசம். ரெட்டி டைரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கள்ளத்துப்பாக்கி என்கிற படத்தை இயக்கிய அலாவுதீன் இயக்குகிறார்.

ரெட்டி டைரி படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற ஸ்ரீரெட்டி தான் இனி தொடர்ந்து சென்னையிலேயே இருக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் படத்தின் சிறப்பு என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, தன்னை ஏமாற்றியவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்ட உள்ளதாக பொடி வைத்து பேசினார். சிறிது விளக்கமாக கூறுமாறு செய்தியாளர்கள் கேட்ட போது ஸ்ரீரெட்டி தயங்கினார். பின்னர் தயாரிப்பாளர் மற்றும்  இயக்குனர் ஓ.கே சொன்னதும், தன்னுடன் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் நெருக்கமாக இருந்த போது எடுத்த வீடியோவை ரெட்டி டைரி படத்தில் காட்சிகளாக பயன்படுத்தப்போவதாக அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டார். இதனை கேட்டு செய்தியாளர்கள் அதிர்ந்தபோது எந்த அதிர்ச்சியும் இல்லாமல் ஸ்ரீரெட்டி அமைதியாக இருந்தார்.

இதற்கு முன்னர் வீடியோ எதுவும் இல்லை என்று கூறினீர்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திரைப்படம் வெளியாகும் போது உங்களுக்கு உண்மை தெரியும் என்று ஸ்ரீரெட்டி பதில் அளித்தார். மேலும் வீடியோவில் யார் யார் இருக்கிறார்கள் என்று ஸ்ரீரெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அந்த தகவலை தற்போது தான் வெளியிட்டால் தனத உயிருக்கே ஆபத்து என்றார்.

மேலும் என்னுடன் நெருக்கமாக இருந்த மேலும் சிலரின் பெயரை தற்போது கூறினால் தமிழகத்தில் பூகம்பமே வெடிக்கும் என்றும் ஸ்ரீரெட்டி அடுக்கடுக்காக கூறிக் கொண்டே சென்றார். அதுபோன்ற காட்சிகளை பயன்படுத்த சென்சார் எப்படி அனுமதிக்கும்? என்கிற கேள்விக்கு கதைக்கு தேவை என்றால் சென்சார் அனுமதிக்கும் என்று இயக்குனர் பதில் அளித்தார்.  ஆக மொத்தத்தில் ஸ்ரீரெட்டி தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வீடியோவை வைத்து காசு பார்க்கப்போகிறார் என்பது தான் ரெட்டி டைரி படத்தின் முக்கியமான விஷயம் ஆகும்.