வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் வாத்தி. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் வெங்கி அர்லூரி இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படம் முதலில் டிசம்பர் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் படத்தின் பணிகள் முடிய தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ட்ரோல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரியுடன் அஜித் கொடுத்த ‘நச்’ விளக்கம்

Scroll to load tweet…

இந்நிலையில், தற்போது வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை அந்நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'வாரிசு' இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலையை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்?